/உள்ளூர் செய்திகள்/திருச்சி/முறைகேட்டின் உருவமாக திகழ்ந்த மேற்கு தொகுதி திருச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்முறைகேட்டின் உருவமாக திகழ்ந்த மேற்கு தொகுதி திருச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
முறைகேட்டின் உருவமாக திகழ்ந்த மேற்கு தொகுதி திருச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
முறைகேட்டின் உருவமாக திகழ்ந்த மேற்கு தொகுதி திருச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
முறைகேட்டின் உருவமாக திகழ்ந்த மேற்கு தொகுதி திருச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
ADDED : செப் 10, 2011 03:32 AM
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து கட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், ''கடந்த சட்டசபைத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி முறைகேட்டின் ஒட்டுமொத்த உருவாக இருந்தது,'' என்று, அ.தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் குற்றஞ்சாட்டினார்.திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அக்டோபர் 13ல் நடக்கவுள்ள திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.இதில், கலெக்டர் ஜெயஸ்ரீ, டி.சி.,ஜெயபாண்டியன், மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ், டி.ஆர்.ஓ., மாணிக்கம், ஆர்.டி.ஓ., (பொ) சம்பத் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க,.
தே.மு.தி.க., பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆட்சேபணை தெரிவிக்க, வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் கேட்கப்பட்டது. அதுகுறித்து தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், என்று கலெக்டர் தெரிவித்தார்.அடுத்ததாக, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டைகளை, மறுபதிவு செய்ய வாங்கிக் கொள்ளவேண்டும், என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அதற்கு, கலெக்டர் ஒப்புதல் அளித்தார். ஆனால், அவற்றை தேர்தல் முடிந்த பின்தான் பரிசீலனை செய்வோம், என்றார்.ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாநகர் மாவட்ட செயலாளருமான மனோகரன் பேசுகையில், ''திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடத்த அ.தி.மு.க., முழு ஒத்துழைப்பை அளிக்கும். அதேசமயம், கடந்த சட்டசபைத் தேர்தலில் முறைகேடுகளின் ஒட்டுமொத்த உருவமாக திருச்சி மேற்கு தொகுதி இருந்தது. அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வரும் செப்டம்பர் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது. அதை தேர்தல் கமிஷனில் அனுமதி வாங்கி நடத்தலாமா?. அப்படி நடத்தினால், அது வேட்பாளரின் கணக்கில் சேருமா,'' என்று கேள்வி எழுப்பினார்.அப்போது, கூட்டத்தில் இருந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் உள்ளிட்ட யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது, கூட்டத்தில் பங்கேற்ற அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


