Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கன மழை: முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை

கன மழை: முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை

கன மழை: முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை

கன மழை: முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை

ADDED : செப் 03, 2011 11:21 PM


Google News

மஞ்சூர் : நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அணைகளில் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது; குந்தா, மாயார் அணைகள் முழு கொள்ளளவை எட்டின.

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை, அவலாஞ்சி, காட்டுகுப்பை, மாயார், பைக்காரா உட்பட 13 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 750 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பரவலாக பெய்து வரும் மழையால் மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் எமரால்டு பகுதிகளில் மழை குறைந்ததால் அப்பகுதியை சுற்றியுள்ள அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் தண்ணீரின் அளவு குறைவாக காணப்பட்டது.



மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளில் தண்ணீர் அளவு பரவலாக இருந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது. குந்தா, மாயார் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இந்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அணை கொள் தண்ணீர் அளவு இருப்பு (அடியில்)



1.முக்கூர்த்தி 18 17.5

2.பைக்காரா 89 79.0

3.சாண்டிநல்லா 49 21.5

4.கிளன்மார்கன் 33 18.0

5.மாயார் 17 17.0

6.அப்பர்பவானி 210 199.0

7.பார்சன்ஸ்வேலி 77 76.8

8.போர்த்தி மந்து 130 124.6

9.அவலாஞ்சி 171 135.6

10.எமரால்டு 184 147.5

11.குந்தா 89 89.0

12.கெத்தை 156 150.0

13.பில்லூர் 242 220.0







      Our Apps Available On




      Dinamalar

      Follow us