Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கூட்டுறவு சங்க இடத்தில் அதிகாரிகள் சர்வே

கூட்டுறவு சங்க இடத்தில் அதிகாரிகள் சர்வே

கூட்டுறவு சங்க இடத்தில் அதிகாரிகள் சர்வே

கூட்டுறவு சங்க இடத்தில் அதிகாரிகள் சர்வே

ADDED : அக் 12, 2011 11:42 PM


Google News
அன்னூர்:கலெக்டர் உத்தரவின்பேரில், கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இடத்தை நில அளவைத் துறையினர் நேற்று 'சர்வே' செய்தனர்.

அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி 1973ம் ஆண்டு சொந்த கட்டடம் அமைக்க 50 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கியது. இந்நிலையில், விவசாயி முருகசாமி என்பவர், 'தனக்கு சொந்தமான 13 சென்ட் இடத்தை வங்கி தவறுதலாக எடுத்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும்,' என, ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறார். தமிழக அரசு, கூட்டுறவுத்துறை மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

மனுவை விசாரித்த, கோவை கலெக்டர் கருணாகரன்,'தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி இடத்தை நில அளவைத்துறை, வருவாய்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இணைந்து அளவை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். நில அளவைத்துறை மாவட்ட உதவி இயக்குனர் சேதுராமலிங்கம், சர்வே இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கோவை வடக்கு தாலுகா துணை தாசில்தார் சுமதி, கூட்டுறவு சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கெம்ப நாயக்கன்பாளையம் வந்தனர். வங்கிக்கு சொந்தமான இடத்தை அளந்தனர். 'நில அளவை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us