Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி மாநகராட்சியில் மனுக்கள் பரிசீலனை

திருச்சி மாநகராட்சியில் மனுக்கள் பரிசீலனை

திருச்சி மாநகராட்சியில் மனுக்கள் பரிசீலனை

திருச்சி மாநகராட்சியில் மனுக்கள் பரிசீலனை

ADDED : அக் 08, 2011 11:47 PM


Google News
திருச்சி: திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் வேட்புமனு பரிசீலனையில் 782 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கு கடந்த 30ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது.

இதில் மேயர் வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர்கள் உட்பட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 188 பேரும், பொன்மலை 219, அரியமங்கலம் 221, கோ.அபிஷேகபுரத்தில் 172 பேர் உட்பட 800 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்: 1.ஜெயா (அ.தி.மு.க), 2. டாக்டர் ரொஹையா (ம.தி.மு.க), 3.ஆயிஷா பானு (ம.தி.மு.க.,மாற்று) 4. பழனியம்மாள் (சுயே), 5. ராஜாத்தி (அ.தி.மு.க.,மாற்று) 6. லட்சுமி (சுயே) 7. ராதா (சுயே), 8. விஜயா (தி.மு.க.,), 9. ராஜேஸ்வரி (தி.மு.க.,மாற்று), 10. யமுனாபாய் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி), 11. நாகரத்தினம் (புதிய தமிழகம்), 12. லதா (இந்திய ஜனநாயக கட்சி), 13.லீமா ரோஸ்லின் ( பா.ம.க.,), 14. சின்ன நாகம்மாள் (சுயே), 15. சித்ரா (தே.மு.தி.க.,), 16 மேரி சுஜா (வி.சி.,), 17. கிரிஜா (பா.ஜ), 18. விஜயா (காங்கிரஸ்), 19. ராதிகா (காங்., மாற்று), 20. பூரணிமா (தே.மு.தி.க., மாற்று), 21. சுகந்தி (பகுஜன் சமாஜ் கட்சி).பகுஜன் சமாஜ் கட்சி மேயர் வேட்பாளர் சுகந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது உறுதி மொழி பத்திரம் சரியாக பூர்த்தி செய்யாமல் இருந்தது. இன்று(9ம் தேதி) காலை 11 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளதால், தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய கமிஷனர் வீர ராகவராவ் அறிவுறுத்தினார். ஏற்றுக்கொள்ளப்பட்ட கவுன்சிலர் வேட்புமனு விபரம்:ஸ்ரீரங்கம் கோட்டம்: ஸ்ரீரங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 188 பேரில், நான்காவது வார்டு சுயேட்சை வேட்பாளர் தாமோதரன். இவரது வேட்புமனுவில் கையெழுத்து இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 187 பேர் போட்டியில் உள்ளனர். இக்கோட்டத்தில் 15 வார்டுகள் உள்ளது.பொன்மலை கோட்டம்: 17 வார்டுகளை கொண்ட இக்கோட்டத்தில் 219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் எட்டு பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் விபரம்: தேவகி(38வது வார்டு), 39வது வார்டில் பங்காரு, வீரசேகர் மற்றும் டேவிட் சகாயராஜ் (வி.சி.,), 63வது வார்டில் சரோஜா, மதிவாணன், 65வது வார்டில் சங்கீதா ஆகிய எட்டு பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 211 பேர் போட்டியிடுகின்றனர்.கோ. அபிஷேகபுரம் கோட்டம்: 15 வார்டுகளை கொண்ட இக்கோட்டத்தில் 172 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேன்மொழி(41வது வார்டு) பாலகிருஷ்ணன்(51வது வார்டு), தமிழ்செல்வன்(50வதுவார்டு). இங்கு 169 வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டுள்ளது.அரியமங்கலம் கோட்டம்: இங்கு 221 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் ஆறு பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 215 பேர் கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இக்கோட்டத்தில் 18 வார்டுகள் உள்ளது.மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 800 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், நான்கு கோட்டத்திலும் 18 வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு, 782 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us