/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அ.தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ங்கஅ.தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ங்க
அ.தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ங்க
அ.தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ங்க
அ.தி.மு.க., வேட்பாளர் மனு தள்ளுபடி செய்ங்க
ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: 'திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் ஓட்டுகள் உள்ளதால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என பிற வேட்பாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ரகளையில் ஈடுபட்ட வேட்பாளர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.தமிழகம் முழுவதும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் டவுன் பஞ்சாயத்தை சேர்த்தது தவறு என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர் திடீரென திருச்சி மாநகராட்சிக்கும் 17ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த செப்.,30ம் தேதி துவங்கி அக்.,7ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடந்தது. மேயருக்கு 21, வார்டு கவுன்சிலர்களுக்கு 800 என வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திருச்சி மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது.திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள், கே.அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு கோட்டங்கள் உள்ளன. அரியமங்கலம் கோட்டத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.அரியமங்கலம் கோட்டம் 25வது வார்டில் அ.தி.மு.க., ஜெரால்டு மில்டன், மாற்று லவ்லின் டீனா, தி.மு.க., சகாயமேரி செல்வியா, தே.மு.தி.க., சரவணன், காங்கிரஸ் பார்த்தசாரதி, பாரதியஜனதா செல்வராஜ், தேசியவாத காங்கிரஸ் ஜெய்குமார், சுயேச்சை, சக்திவேல், பாபு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ''அ.தி.மு.க., வேட்பாளர் ஜெரால்டு மில்டனுக்கு 25, 22 ஆகிய இரண்டு வார்டுகளில் ஓட்டு உள்ளது. எனவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என கோரி அனைத்து வேட்பாளர்களும் ரகளையில் ஈடுபட்டனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜம்மாள், உதவி வருவாய் அலுவலர் சண்முகம் மற்றும் தேர்தல் அலுவலர்கள், ''எங்களது மேலதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். உடனடியாக வேட்புமனுவை தள்ளுபடி செய்ய முடியாது. மேல் அதிகாரிகள் உத்தரவுப்படி அனைத்தும் நடக்கும். அடுத்த வார்டுகளுக்கு வேட்புமனு பரிசீலனை நடத்த வேண்டும். அறையைவிட்டு வெளியேறுங்கள்,'' என்றனர்.ஆனால், யாரும் அறையை விட்டு வெளியேறாமல், உள்ளேயே அமர்ந்து கொண்டனர். அவர்களை வெளியேற்றும்படி ராஜம்மாள் தெரிவித்தார். இதையடுத்து, கண்டோன்மென்ட் போ லீஸ் ஏ.சி., காமராஜ், பாலக்கரை இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், காமராஜ் மற்றும் போலீஸார் அவர்களை வெளியேற்றினர்.அப்போது, வேட்பாளருடன் வந்த ஒருவர் உள்ளேயே படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். போலீஸார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளி யே அப்புறப்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரம் வேட்புமனு பரிசீலனை தடைபட்டது.இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜம்மாள் கூறுகையில், ''வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பது சகஜம் தான். பிற வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்துள்ளோம். அவர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ, அதன்படி பரிசீலனை நடக்கும்,'' என்றார்.


