/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மூதாட்டி மீது ஆஸிட் ஊற்றிய வாலிபர் கைதுமூதாட்டி மீது ஆஸிட் ஊற்றிய வாலிபர் கைது
மூதாட்டி மீது ஆஸிட் ஊற்றிய வாலிபர் கைது
மூதாட்டி மீது ஆஸிட் ஊற்றிய வாலிபர் கைது
மூதாட்டி மீது ஆஸிட் ஊற்றிய வாலிபர் கைது
ADDED : அக் 11, 2011 01:43 AM
போச்சம்பள்ளி : பாலீஸ் போட கொலுசை தர மறுத்த மூதாட்டி மீது ஆஸிட்டை ஊற்றிய வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி கொல்லக்கொட்டாய் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நகைகளுக்கு பாலீஸ் போடுவதாக கூறி வீடு வீடாக சென்றுள்ளார்.அப்போது குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் வீட்டில் தனியாக இருந்த காளியம்மாள் (75) என்ற மூதாட்டியிடம் பாலீஸ் போடுவதற்கு நகைகளை கேட்டுள்ளார்.
ஆனால், தன்னிடம் நகை இல்லை என காளியம்மாள் கூறியுள்ளார்.காளியம்மாளின் காலில் இருந்த கொலுஸை பார்த்த வாலிபர் அதனை கழற்ற முயன்றுள்ளார். இதனை காளியம்மாள் தடுத்துள்ளார். போதையில் இருந்த அந்த வாலிபர் ஆத்திரமடைந்து பாலீஸ் போடுவதற்காக வைத்திருந்த ஆஸிட்டை காளியம்மாள் மீது ஊற்றியுள்ளார்.இதனால், உடலில் எரிச்சல் அடைந்த காளியம்மாள் சத்தம் போட்டுள்ளார். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து போச்சம்பள்ளி போலீஸில் ஒப்படைத்தார்.போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குஜராத் மாநிலம் அகமாதாபாத்தை சேர்ந்த சங்கர்குமார் (25) என தெரிந்தது அவரை போலீஸார் கைது செய்தனர்.


