முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 08, 2011 11:00 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கண்மாயில் ஏலம் விடப்பட்ட கருவேல மரங்கள் வெட்டபட்டு வருகின்றன.
முள்செடிகள் முதுகுளத்தூர்- கடலாடி செல்லும் ரோட்டோரங்களில் குவிக்கபட்டுள்ளன. மேலும் முள்செடிகள் மீது செல்லும் டூவீலர்கள் 'பஞ்சர்' ஆகி நீண்டதூரம் தள்ளிக்கொண்டு செல்ல நேரிடுகிறது. எனவே, ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள முள்செடிகளை ஏலம் எடுத்தவர்கள் அகற்ற வேண்டும்.


