/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி., ஆய்வுபதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி., ஆய்வு
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி., ஆய்வு
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி., ஆய்வு
பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் போலீஸ் எஸ்.பி., ஆய்வு
ADDED : அக் 10, 2011 10:25 PM
அன்னூர் : அன்னூரில், பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கோவை ரூரல் எஸ்.பி., உமா ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தலில் அன்னூர் ஒன்றியத்தில் 137 ஓட்டுச்சாவடிகளும், பேரூராட்சியில் 15 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. பேரூராட்சியில் 13 ஆயிரத்து 233 வாக்காளர்களும், 21 கிராம ஊராட்சிகளில் 62 ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர். ஓட்டுச்சாவடிகள் அவை அமைந்துள்ள பகுதியை பொறுத்து, பதட்டமானவை, பதட்டமில்லாதவை என பிரிக்கப்பட்டுள்ளன. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுகின்றனர்.நேற்று முன் தினம் கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., உமா அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம் விசாரித்தார். பேரூராட்சி பகுதியில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடி மற்றும் ஒட்டர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த குருக்கிளையம்பாளையம் ஓட்டுச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 'தேர்தல் விதிமுறை சரியாக பின்பற்றப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


