/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளாட்சி தேர்தலுக்கு 1,400 போலீஸார் பதட்டமான 30 இடங்களில் கூடுதல் கண்காணிப்புஉள்ளாட்சி தேர்தலுக்கு 1,400 போலீஸார் பதட்டமான 30 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு 1,400 போலீஸார் பதட்டமான 30 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு 1,400 போலீஸார் பதட்டமான 30 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு
உள்ளாட்சி தேர்தலுக்கு 1,400 போலீஸார் பதட்டமான 30 இடங்களில் கூடுதல் கண்காணிப்பு
ADDED : அக் 11, 2011 02:34 AM
ஈரோடு:உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 30 இடங்களை பதட்டமான ஓட்டுச்சாவடியாக போலீஸார் கணக்கெடுத்துள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒன்பது டி.எஸ்.பி., தலைமையில் 1,400 பாலீஸார் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தை 205 மண்டலமாக பிரித்து, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் 14 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துவங்கப்பட்டு, டி.சி.ஆர்.பி., டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்காணிப்பில், மூன்று எஸ்.ஐ.,க்கள், இரண்டு ஏட்டு, மூன்று போலீஸாõர் அடங்கிய குழுவினர் பணியில் உள்ளனர். பதட்டமான ஓட்டுச்சாவடி, கண்காணிப்பு, தேர்தல் பிரச்னை விபரங்களை சேகரித்தல் ஆகிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு டவுன் சப்-டிவிஷனில் உள்ள அனைத்து ஸ்டேஷனுக்கும் எல்லை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போலீஸார் வழி நடத்தி செல்லப்பட்ட விதிகள் உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படுகிறது.போலீஸ் ஸ்டேஷன் சென்ட்ரி, கன்ட்ரோல் ரூம் பணி செய்வோர், ரேடியோ பிரிவு, நுண்ணறிவு பிரிவு, டிரஸரி கார்டு, வி.ஐ.பி., கார்டு, வி.ஐ.பி., எஸ்காட், பிக்கெட்டிங் குழுவினர், டிராஃபிக் போலீஸார், டி.பி.ஓ., கார்டு, மெஸ் கார்டு, வங்கி காவலர்கள், öபோஸ்ட், மோப்பநாய் பிரிவுகளை தவிர உள்ளூர் போலீஸார் மற்றும் ஆயுதப்படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒன்பது டி.எஸ்.பி.,க்கள், 44 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,400 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.கோபி யூனியன் மொடச்சூர், நம்பியூர், கூடக்கரை, கலிங்கியம், கொளாநல்லி, விளக்கேத்தி, கந்தசாமிபாளையம், அரச்சலூர் அருகே குமாராபாளையம், வடுகபட்டி, கனகபுரம், வள்ளிபுரத்தான்பாளையம், பவானி, குருப்பநாயக்கன்பாளையம், சங்கராபாளையம், ஒரிச்சேரிப்புதூர், நல்லாம்பட்டி, சேர்வராயன்பாளையம், ஜரத்தல், எண்ணமங்கலம், வளையக்காரவீதி, நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை என 30 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறிந்துள்ளனர். இங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


