"மாஜி'யின் உதவியாளர் "எஸ்கேப்' கோட்டைவிட்ட மாநகர போலீஸ்
"மாஜி'யின் உதவியாளர் "எஸ்கேப்' கோட்டைவிட்ட மாநகர போலீஸ்
"மாஜி'யின் உதவியாளர் "எஸ்கேப்' கோட்டைவிட்ட மாநகர போலீஸ்
சேலம் : முன்னாள் அமைச்சரின் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளரும், உறவினருமான கவுசிக பூபதி, வாழப்பாடியில், தி.மு.க., பிரமுகரின் வீட்டில் தங்கி இருப்பது குறித்து, கமிஷனருக்கு உறுதியான தகவல் கிடைத்தும், அவரை கைது செய்யாமல், சேலம் மாநகர போலீஸ் கோட்டை விட்டது.
சென்னை ஐகோர்ட் உத்தரவு படி, ஆக., 18ல், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில், இவர் சரண்டர் ஆகி இருக்க வேண்டும். ஆனால், இன்னும் சரணடையவில்லை. வழக்குகள் பதிந்து, 40 நாட்களுக்கு மேல் ஆகியும், கவுசிக பூபதியை மாநகர போலீசாரால் கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளை வலசில், தி.மு.க., பிரமுகர் ஜெயராமன் வீட்டில், கவுசிக பூபதி தங்கி இருப்பதாக, சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு, நேற்று காலை, உறுதியான தகவல் கிடைத்தது. சேலம் கமிஷனர் உத்தரவின்படி, தனிப்படை போலீசார், வாழப்பாடி விரைந்தனர். ஆனால், தனிப்படையினர் வருகை குறித்து, முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு தெரிந்து, அவர் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
கவுசிக பூபதியை கைது செய்யும் விவகாரத்தில், கமிஷனருக்கும், தனிப்படை போலீசாருக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம், கசிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கமிஷனரிடம் கேட்க முயன்ற போது, அவரை தொடர்பு கொள்ள இயவில்லை. சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் சத்யபிரியா கூறுகையில், 'கவுசிக பூபதி கைது செய்யப்பட்டாரா என்பது, உறுதியாக கூற இயலாது. அதே நேரத்தில், அவரை கைது செய்ய மூன்று தனிப்படையினர், தங்களின் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.


