Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/திருமண மண்டபம், பொதுநூலகம் :தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம் உறுதி

திருமண மண்டபம், பொதுநூலகம் :தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம் உறுதி

திருமண மண்டபம், பொதுநூலகம் :தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம் உறுதி

திருமண மண்டபம், பொதுநூலகம் :தி.மு.க., வேட்பாளர் மாணிக்கம் உறுதி

ADDED : அக் 08, 2011 02:09 AM


Google News
மதுரை : ''மதுரை மாநகராட்சி வடக்கு மாசி வீதி 83வது வார்டில் திருமண மண்டபம், பொது நூலகம், அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் அமைத்து முன்மாதிரியாக மாற்றப்படும்,'' என தி.மு.க., வேட்பாளர் அ.மாணிக்கம் தெரிவித்தார்.இதே வார்டில் இவர் இரு முறை வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்தார்.

மாணிக்கம் கூறியதாவது: நல்லமநாயுடுதெரு, பேச்சியம்மன்படித்துறை ரோடுகளில் சாக்கடையில் அடைப்பால் வெளியேறிய கழிவுநீர், பம்பிங் ஸ்டேஷன் அமைத்து கீழமாசி வீதி கொண்டு செல்லப்பட்டது. முத்துசாரதா மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் அமைத்தேன். வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் பயனற்ற சத்துணவு கூடத்தில் எம்.எல்.ஏ., நிதி ரூ.25 லட்சத்தில் ஜிம் அமைக்கும் பணி நடக்கிறது. ஏழு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் ரூ.6 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தன. இம்முறை வெற்றி பெற்றவுடன் பரமசிவம்பிள்ளைசந்து, தானப்பமுதலி தெருவில் சாக்கடை அடைப்பை சரி செய்ய பம்பிங் ஸ்டேஷன், தெருக்களில் பேவர் பிளாக், தானப்பமுதலி தெரு குப்பை சென்டரை அப்புறப்படுத்தி திருமண மண்டபம், நூலகம் மற்றும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைக்கப்படும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us