ADDED : அக் 06, 2011 10:28 PM

பழநி நகராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய வந்த பிரதான கட்சியினரை 'கிளிக்' செய்ய, பத்திரிகை போட்டோகிராபர்கள் காத்திருந்தனர்.
சட்டையில் 'பேட்ஜ்' குத்திக் கொண்டு, மூன்று காக்கிச் சட்டைகள் மனுவுடன் வந்தனர். 'நண்பர்கள் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் நான் (எஸ்.ஜெகதீஷ்குமார்) மனு தாக்கல் செய்கிறேன்,'' என, அதில் ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். ''எல்லோரையும் படம் எடுக்கறீங்க. எங்களுக்கும் போட்டோ போட்டு, ஆதரவு குடுங்கண்ணே!,'' என, அன்புக் கட்டளை இட்டார்.
''நாங்க ஆதரவு கொடுக்குறோம். ஆனா, ஓட்டுப் போட வேண்டியது மக்கள் தானே. கட்சிக்காரங்க விதவிதமா வாக்குறுதி வழங்கி ஓட்டுக்கள வளைக்கிறாங்க. நீங்களும் அதிரடி கட்டண சலுகை அறிவிச்சா, மக்கள் உங்க பக்கம் திரும்பிடுவாங்க!'' என, 'டிப்ஸ்' கொடுத்தார், மூத்த நிருபர் ஒருவர். சூப்பரான யோசனைங்க!.


