/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடுஉள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு
உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு
உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு
உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு
ADDED : செப் 16, 2011 01:50 AM
குற்றாலம் : 'உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் அரசியல் கட்சிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளும்' என அக்கட்சியின் மாநில தலைவர் காதர்முகைதீன் கூறினார்.
குற்றாலம் வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்முகைதீன் நிருபர்களிடம் கூறியதாவது: ''கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலை தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்று சந்தித்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. ஏற்கனவே கடந்த 10ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.கூட்டணியில் தொடர்கிறது என தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். இது தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்றாலும் கூட்டணி கட்சிகளிடம் இதுபற்றி ஆலோசனை செய்யவில்லை. எங்களின் நிலைபாடு என்ன என்பது குறித்து இப்போது மாநில நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் இணைந்து வரும் அரசியல் கட்சிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி உடன்பாடு செய்யவும், இதற்கான அதிகாரத்தை பிரைமரி, நகர, மாநகர, மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கு அளிக்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் பிற கட்சி பிரமுகர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பேசி தொகுதி உடன்பாடு செய்து கொள்வர். இது பற்றி அவர்கள் கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்துவார்கள். கூட்டணியை தேடி போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உள்ளாட்சி தேர்தலில் முழு அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும். மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னும் சில நாட்களில் சென்னையில் நடக்கும் கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்போம்'' என்றார் காதர்முகைதீன். பேட்டியின் போது மாநில பொது செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான், மாநில துணைத் தலைவர் கோதர்முகைதீன், நிர்வாகிகள் நெல்லை மஜீத், ஷம்சுதீன், செய்யது முகமது, முகமது இஸ்மாயில், முகமது அலி உடனிருந்தனர்.


