பெண் ராணுவ அதிகாரி தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் ராணுவ அதிகாரி தண்டனை நிறுத்தி வைப்பு
பெண் ராணுவ அதிகாரி தண்டனை நிறுத்தி வைப்பு
ADDED : ஜூலை 14, 2011 04:12 AM
சண்டிகர்: , ராணுவ விசாரணையின்போது குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட ரூ.
10ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக , எழுந்த புகாரின் பேரில் ராணுவ கோர்டினால் தண்டிக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி ஒருவர் மீதான ஒரு வருட தண்டனையை , நீதித்துறை நிர்வாக தீர்ப்பாயம் நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்தவர் மேஜர் டிம்பிள் சிங்களா.இவர்கடந்த 2007-ம் ஆண்டு பணியிலிருந்து ஒய்வு பெற்றுவிட்டார். எனினும் இவர் ராணுவ மேஜர் ஜெனரலாக பணியாற்றிய போது, ராணுவ கோர்ட் வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்மீது ராணுவ கோர்ட் கடநத 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதைத்தொடந்து நடந்த விசாரணையில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி குற்றவாளி என அறிவிக்க்பட்டது. இவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனினும் அவர் மார்ச் 10-ம் தேதி ஜாமினில் விடுதலையானார். இந்நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வந்தது. தன் மீதான தண்டனை மற்றும் பதவி நீக்கம் குறித்து சண்டிகார் நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு செய்திருந்தார் . இந்த மனு நேற்று விசரணை வந்து. நீதித்துறை உறுப்பினர்கள் கன்ஷியாம் பிரசாத், லெப்டினல் கர்னல் பனாக் ஆகியோர் , மேஜர் டிம்பிள் சிங்களாவின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். ராணுவ கோர்டினால் தண்டிக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிட தக்கது.


