ADDED : ஆக 03, 2011 12:46 AM

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய மீரா சங்கர், கடந்த, 31ம் தேதியுடன் தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
வாஷிங்டனில் அவருக்குப் பல்வேறு இடங்களில் பிரிவுபசார விழாக்கள் நடத்தப்பட்டன. வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் மீரா சங்கர் காட்டிய ஆர்வத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


