/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டுகவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
கவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
கவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
கவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு
ADDED : ஆக 17, 2011 01:42 AM
கவுண்டம்பாளையம்
: கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, ஏழு லட்சம் ரொக்கம், 10
சவரன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.கவுண்டம்பாளையம் சேரன் நகர் அருகே வசிப்பவர் ரவீந்திரன்; ஓய்வு
பெற்றவர்.
நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்று
விட்டு, நேற்று காலை திரும்பினார். வீட்டின் முன்புறக் கதவு
உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 10 சவரன்
நகை, ஏழு லட்ச ரூபாய் திருடு போய் இருந்தது. இது குறித்து ரவீந்திரன்
துடியலூர் போலீசில் புகார் செய்தார்.கடந்த 1ம் தேதி கவுண்டம்பாளையம்
எஸ்.பி.நகரை சேர்ந்த முகமது சபீர் என்பவருடைய வீட்டு பீரோவில்
வைக்கப்பட்டிருந்த 70 சவரன் நகை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம்
ஆகியவை திருடு போனது. கடந்த மாதம் 18 ம் தேதி, கவுண்டம்பாளையம், முருகன்
நகர் 5வது குறுக்கு தெருவில் வசிக்கும் குழந்தைசாமி என்பவருடைய வீட்டின்
கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்
ரொக்கம், 45 பவுன் நகை, 200 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன.
துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களில்
பல்வேறு இடங்களில் நடந்த திருட்டுகளில் 220 சவரன் நகை, 14 லட்ச ரூபாய்
ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போய் உள்ளது. தொடர் திருட்டால், திருடர்களை
கண்டுபிடிக்க முடியாமல் துடியலூர் போலீசார் கலங்கி போய் உள்ளனர்.