தொல்லைதரும் அழைப்புகள்:மத்திய அரசு அதிரடி
தொல்லைதரும் அழைப்புகள்:மத்திய அரசு அதிரடி
தொல்லைதரும் அழைப்புகள்:மத்திய அரசு அதிரடி
புதுடில்லி: மொபைல்போன்களில் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு 130 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் மிலிந்த்தியோரா ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 47 ஆயிரத்து 454 புகார்கள் வந்துள்ளது. கடந்த மே மாதம் வரையில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) எடுத்த நடவடிக்கையால் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் என ஒரு லட்சத்து 90 ஆயிரம் தொலை தொடர்புகளை துண்டித்துள்ளது.
கடந்த மாதம் ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபில் மொபைல் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைலுக்கு தேவையில்லாமல் வரும் அழைப்புகளை தவிர்க்க விரும்பினால் 1909 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஆறு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். விருப்பம் இல்லாத சந்தாதாரர்களுக்கு போன் செய்யும் நிறுவனங்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 2லட்சத்து 50 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் தியோரா தெரிவித்தார்.


