/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ராமமூர்த்தி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனுநந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ராமமூர்த்தி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ராமமூர்த்தி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ராமமூர்த்தி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு
நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ராமமூர்த்தி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு
ADDED : செப் 04, 2011 11:28 PM
விழுப்புரம் : நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ., விடம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல். ஏ., ராமமூர்த்தி அளித்துள்ள மனு: திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தி மலையில் துரிஞ்சல் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பள்ளிக்கொண்டாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு சிறிய அணைக்கட்டில் இருந்து உருவாகிறது நந்தன் கால்வாய். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதியில் 36 ஏரிகள் பாசன வசதி பெறுகிறது. இந்த நந்தன் கால்வாய் சீரமைப்பதற்காக 29.9.1970ம் ஆண்டு 31 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் துவங்கப்பட்டு 1978ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நந்தன் கால்வாய் கடைமடை பகுதியில் உள்ள பனமலை ஏரிக்கு தண்ணீர் வந்ததே இல்லை. நந்தன் கால்வாய்க்கு தண்ணீர் கிடைப்பதற்குதுரிஞ்சல் ஆற்று நீரை முழுமையாக திருப்பிவிட வேண்டும். பாலாறு வரண்ட பாலைவனமாக்கபட்டு விட்ட நிலையில் இத்திட்டம் நிறைவேற்றுவது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். நந்தன் கால்வாய் பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதற்கு கால்வாயை ஆழமாகவும், அகலமாகவும் விரிவுபடுத்த வேண்டும். இதனால் மூன்று தொகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் பயன்பெறும்.


