/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை'"அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை'
"அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை'
"அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை'
"அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை'
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதி பெற்ற வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை என, சோமந்துரைசித்தூர் ஊராட்சி தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த சோமந்துரைசித்தூர் ஊராட்சி தலைவர் நாயகம், வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த மனு: பொள்ளாச்சியில் இருந்து சோமந்துரை மற்றும் தென்சித்தூர் கிராமங்களுக்கு கோட்டூர், நா.மூ.சுங்கம், வழியாக மூன்று அரசு பஸ்களும், மூன்று தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், 57ஏ என்ற அரசு பஸ் சமத்தூர், சோமந்துரை சித்தூர் வழியாக ஆழியாறு மற்றும் ரமணமுதலிபுதூருக்கு இயக்கப்படுகிறது. ஆனால், சோமந்துரைசித்தூர் வழியாக வரும் தனியார் பஸ்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் இயங்காமல் வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பல நேரத்தில் சோமந்துரைசித்தூர் வராமல் பாதியிலேயே திரும்பி சென்று விடுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் கடைசி 'டிரிப்' அரசு மற்றும் தனியார் பஸ்கள் சோமந்துரைசித்தூர் வருவதில்லை. அரசு பஸ் வழித்தட எண் 57ஏ பல நேரங்களில் கிராமத்திற்கு வருவதில்லை. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். பஸ்கள் பழுதடைந்தால் மாற்று பஸ்களை இயக்க வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.