தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு
தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு
தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு
ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக,''மாவட்ட கவுன்சில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவக்குமார் கூறினார்.
சிவகாசி ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5வது வார்டில் அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும், சிவகாசி தொகுதி செயலாளரும், வேட்பாளருமான சிவக்குமார் ,வடமலாபுரம்,பள்ளபட்டி,பேராபட்டியில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க.,ஆளுங்கட்சியாக உள்ளதால் ,என்னை வெற்றி பெறச் செய்தால், என்னுடைய நிதி மட்டுமின்றி, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நிதி பெற்று, பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவேன். பள்ளபட்டி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பேராபட்டியில் ரேஷன் கடை இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.அங்கு உடனடியாக புதிய ரேஷன் கடை அமைக்கப்படும்.புதிதாக வாறுகால்,தெருவிளக்கு மற்றும் சிமென்ட் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வரால் வழங்கப்படும் மிக்சி,கிரைண்டர்,பேன் மற்றும் ஆடு மாடுகள் இப்பகுதி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசின் கூடுதல் நிதி பெற்று செயல்படுத்துவேன். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.


