ரோடு மேம்பாட்டு பணிக்கு ரூ.40 கோடி
ரோடு மேம்பாட்டு பணிக்கு ரூ.40 கோடி
ரோடு மேம்பாட்டு பணிக்கு ரூ.40 கோடி
ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : ''விருதுநகர் ரோடு மேம்பாட்டு பணிக்காக, மத்திய சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.
40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,'' மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.விருதுநகர் மாவட்டத்தில் காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:காங்., ஆட்சியில் மக்கள் அடிப்படை வசதி, தனி மனித வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கல்வி, விவசாய மேம்பாட்டிற்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் காங்., வெற்றி பெற்றால், மத்திய அரசின் சார்பில் பல திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு உருவாகும். மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து, விருதுநகர் ரோடு மேம்பாட்டு பணிக்காகரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு தொழில் வளர்ச்சிக்காக ரூ.10 கோடி செலவில் ஆய்வு வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யும் பட்டாசுகளை தடை செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் ரூ.80 லட்சம் செலவில் வேளாண் அறிவியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் குடி நீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேந்திரிய பள்ளி துவக்கமுடியாது என கூறியவர்கள் மத்தியில் கேந்திரிய பள்ளி துவக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.10 கோடி மதிப்பில் கட்டட பணி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ,'' என்றார்.


