கண்ணிவெடியில் சிக்கியது லாரி : துணை ராணுவத்தினர் 3 பேர் பலி
கண்ணிவெடியில் சிக்கியது லாரி : துணை ராணுவத்தினர் 3 பேர் பலி
கண்ணிவெடியில் சிக்கியது லாரி : துணை ராணுவத்தினர் 3 பேர் பலி
ADDED : அக் 07, 2011 10:32 PM

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில், துணை ராணுவப் படையினர் சென்ற மினி லாரி, நக்சலைட்களின் கண்ணி வெடியில் சிக்கியதில், மூன்று வீரர்கள் பலியாகினர். சத்திஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள சால்வா ஜுடும் அமைப்பினரின் முகாம்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த, 'சசஸ்திர சீமா பால்' என்ற துணை ராணுவப் படையின் வீரர்கள், நேற்று ஒரு மினி லாரியில் ராய்ப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற லாரி, பாஸ்ட்னர் என்ற இடமருகே சென்றபோது, நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கியது. இதில், லாரி தூக்கி வீசப்பட்டது. துணை ராணுவப் படை வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயம் அடைந்த மற்ற வீரர்கள், ஜக்தல்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பஸ் மீது தாக்குதல்: ஆந்திராவின் பார்வதிபுரத்திலிருந்து ஒடிசா
மாநிலம் நாராயணன்பட்டணம் நோக்கிச் சென்ற ஆந்திர மாநில அரசு பஸ்சை, கோராபுட் மாவட்டத்தில் நேற்று நக்சலைட்கள் தாக்கினர். ஆனால், பயணிகள் யாரையும் அவர்கள் தாக்கவில்லை. பஸ்சை மட்டும் கம்பு மற்றும் கற்களால் தாக்கி சேதப்படுத்தினர்.


