ராஜபாளையத்தில் காருடன் கம்பி நீட்டிய கொள்ளையன்
ராஜபாளையத்தில் காருடன் கம்பி நீட்டிய கொள்ளையன்
ராஜபாளையத்தில் காருடன் கம்பி நீட்டிய கொள்ளையன்
ADDED : ஆக 11, 2011 04:00 PM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வீட்டில் திருடிய பொருட்களுடன் காரையும் சேர்த்து அபேஸ் செய்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் பாலகதிரேசன் (75). இவரது மனைவி கோதை. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இந்நிலையில், நேற்றிரவு கோதைக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு பாலகதிரேசன் மதுரை சென்று விட்டார். இன்று காலை பக்கத்து வீட்டில் இருந்தவர் அளித்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற பாலகதிதேசன், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, எல்.சி.டி. டி.வி., மற்றும் டி.வி.டி., ஆகியவற்றுடன், வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த காரும் சேர்த்து திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


