ADDED : ஜூலை 15, 2011 01:05 AM
மயிலம் : சாலை விபத்தில் கிராம கூட்டுறவு வங்கி செயலர் இறந்தார்.
வீடூர் அடுத்த கணபதிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (55). இவர் நெடிமோழியனூர் கிராம கூட்டுறவு வங்கியில் செயலராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நெடிமோழியனூர் சென்று கொண்டிருந்தார். பாலப்பட்டு அருகே பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் சென்றவர், அன்பழகன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த அன்பழகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காலை 8 மணிக்கு அவர் இறந்தார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


