/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்புஇந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு
இந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு
இந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு
இந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு
ADDED : செப் 07, 2011 12:24 AM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தலில் என்.ஆர். காங்., கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி, தான் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. இதன்படி, புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 13ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. 17ம் தேதியன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நன்னடத்தை விதிகள் உடனடி அமல் தேர்தல் அட்டவணை
அறிவிக்கை வெளியாகும் நாள் செப்., 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் செப்., 26
வேட்பு மனு பரிசீலனை செப்., 27
வாபஸ் பெற கடைசி நாள் செப்., 29
ஓட்டுப் பதிவு அக்., 13
ஓட்டு எண்ணிக்கை அக்., 17


