ADDED : ஜூலை 13, 2011 03:23 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி யூனியனில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை, எம்.பி., செம்மலை திறந்து வைத்தார்.பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சேலம் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, 6 லட்ச ரூபாயில் கழிப்பிடம் கட்டப்பட்டது.
அம்மபாளையம் பஞ்சாயத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது.எம்.பி., செம்மலை, கழிப்பிடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், எம்.எல்.ஏ., செல்வம், மாவட்ட மாணவர் அணி தலைவர் தமிழ்மணி, மாவட்ட இணை செயலாளர் தேவகி, ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ஜெகநாதன், விவசாய அணி தலைவர் பாலு, நகர செயலாளர் சின்னதம்பி, தலைமை ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி பங்கேற்றனர்.


