புரோக்கர்கள் மூலம் கார்டு விநியோகம்?
புரோக்கர்கள் மூலம் கார்டு விநியோகம்?
புரோக்கர்கள் மூலம் கார்டு விநியோகம்?
ADDED : ஜூலை 13, 2011 03:23 AM
சேலம், வட்ட வழங்கல் அலுவலகத்தில், 18 ஆயிரத்து, 500 கார்டுகள் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும், தற்போது, 4,500 கார்டுகள் அச்சடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளதாகவும், கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்திருந்தார்.
ரேஷன் கார்டுகள் தயார் நிலையில் இருந்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதில்லை.வட்ட வழங்கல் அலுவலர்கள், தயார் நிலையில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களின் முகவரியை புரோக்கர்களிடம் கொடுத்து விடுவதாகவும், புரோக்கர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களை தொடர்பு கொண்டு, அலுவலர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால், இரண்டு நாளில் ரேஷன் கார்டு கிடைத்து விடும் என்று தெரிவிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.


