/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிராமங்களில் வாரம் ஒருமுறை "சந்தை' : பாவாலி வேட்பாளர் நாகராஜன் உறுதிகிராமங்களில் வாரம் ஒருமுறை "சந்தை' : பாவாலி வேட்பாளர் நாகராஜன் உறுதி
கிராமங்களில் வாரம் ஒருமுறை "சந்தை' : பாவாலி வேட்பாளர் நாகராஜன் உறுதி
கிராமங்களில் வாரம் ஒருமுறை "சந்தை' : பாவாலி வேட்பாளர் நாகராஜன் உறுதி
கிராமங்களில் வாரம் ஒருமுறை "சந்தை' : பாவாலி வேட்பாளர் நாகராஜன் உறுதி
ADDED : அக் 03, 2011 10:56 PM
விருதுநகர் : ''அனைத்து கிராமங்களுக்கும் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்க வாரம் ஒரு முறை 'சந்தை, தொடங்க ஏற்பாடு செய்வேன்,'' என, பாவாலி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.
நாகராஜன் கூறினார். விருதுநகர் பாவாலி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் இவர் ,முத்துராமலிங்கம் நகர் பகுதியில் ஓட்டுகள் சேகரித்தபோது கூறியதாவது: பாவாலி ஊராட்சிக்குட்பட்ட ஊர்களில் மாணவர்கள் அறிவு திறனை வளர்க்கும் வகையில் நூலகம் அமைக்கப்படும். இங்குள்ளவர்கள் 100 சதவீதம் கல்வி கற்றவர்களாக மாற்றுவேன். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி, தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும். இப்பகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்சாலைகள் துவங்குவதற்கு, சம்பத்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும். குண்டும் குழியுமான ரோடுகளை உடனடியாக சீர்படுத்தி பஸ் போக்குவரத்தை அதிகபடுத்துவேன். எனது ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்க வாரம் ஒரு முறை 'சந்தை' நடத்த ஏற்பாடு செய்வேன், என்றார்.


