/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் நேரில் ஆய்வுஇடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : செப் 10, 2011 03:32 AM
திருச்சி: திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சை பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் இறந்ததால், அவர் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 17ம் தேதி நடக்கும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் கமிஷன் அறிவித்தது.இதையடுத்து சுறுசுறுப்பாக களறங்கியுள்ள மாவட்ட நிர்வாகம், நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது.
இடைத்தேர்தல் முறைகேட்டை தடுக்க அமைக்கப்பட்ட ஆறு கண்காணிப்பு குழுக்களும், நேற்றிரவு முதல் அதிரடியாக சோதனைகளையும் துவக்கியுள்ளது.ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள பஞ்சப்பூர் சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மையத்தை, நேற்று மாலை கலெக்டர் ஜெயஸ்ரீ நேரில் சென்று ஆய்வு செய்தார். போலீஸ் டி.சி., ஜெயபாண்டியன், டி.ஆர்.ஓ., மாணிக்கம், ஆர்.டி.ஓ., சம்பத், தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், மனோகரன், செயற்பொறியாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் இடம், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்த கலெக்டர், போதுமான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.


