ADDED : அக் 07, 2011 10:14 PM
மதுரை மாவட்ட பஞ்சாயத்து 23வது வார்டு கள்ளிக்குடி.
இதில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் உட்பட 5 வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் சுப்பாரெட்டி, அ.தி.மு.க.,வில் பாபுசங்கர், காங்., சார்பில் முருகேசன், தே.மு.தி.க., சார்பில் தர்மராஜ் செல்வம் ஆகியோருடன் முருகன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த வார்டில் ம.தி.மு.க., பா.ம.க., சார்பில் போட்டியிட ஆளே இல்லை. இதனால் இவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க.,வினர் 'பம்பரமாக' சுழன்று பணியாற்றுகின்றனராம். திருமங்கலம் சட்டசபை தொகுதியில் கணிசமான ஓட்டுக்கள் இருந்தும், அதற்குட்பட்ட கள்ளிக்குடியில் ம.தி.மு.க.,நிற்க முடியாமல் போய்விட்டது. தே.மு.தி.க., வருகையே தங்கள் கட்சியின் பலவீனமாகிவிட்டதென ம.தி.மு.க.,வினர் வேதனைப்படுகின்றனர்.


