ADDED : அக் 04, 2011 12:53 AM
வெளி மாநிலத்தில் விற்பனையாகும், மலிவு விலை மது பாட்டில்களை வாங்கி, அவற்றை கார், ஜீப், பைக் மூலம் கடத்திக் கொண்டு வருகின்றனர்.
பின், குடோன்களில் வைத்து, வெளி மாநில மது பாட்டில்களில் உள்ள மதுவை, இங்குள்ள பிரபல நிறுவனங்களில், காலி குவார்ட்டர் பாட்டில்களில் ஊற்றுகின்றனர்.அடுத்ததாக, பிரபல நிறுவனங்களின் லேபிள்களையும், போலி கலால் வரி முத்திரையையும் ஒட்டி, இயந்திரங்களின் உதவியுடன் மது பாட்டிலை மூடுகின்றனர். பின், குறிப்பிட்ட பார்களுக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம், ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு, 30 ரூபாய் லாபம் கிடைக்கிறது.மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் சமீபத்திய அதிரடி நடவடிக்கையால், பல இடங்களில் இதுபோன்ற போலி மது தயாரிப்பு தொழிற்சாலைகள் சிக்கி வருகின்றன.-எஸ்.உமாபதி-


