Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுகாதாரமின்றி உணவகங்கள்

சுகாதாரமின்றி உணவகங்கள்

சுகாதாரமின்றி உணவகங்கள்

சுகாதாரமின்றி உணவகங்கள்

ADDED : செப் 02, 2011 11:06 PM


Google News

மடத்துக்குளம் : சுகாதாரக்கேடான முறையிலும் செயல்படும் உணவகங்கள் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியள்ளனர்.

மடத்துக்குளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. சில உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதில்லை, சுத்தமான குடிநீர் வைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 20 'மைக்ரான்' அதிகம் உள்ள பாலிதீன் கவர், கப் ஆகியவற்றில் உணவுப்பொருள், சாம்பார், சட்னி வினியோகிக்கப்படுகிறது. பொது மக்கள் கூறியதாவது: சில உணவகங்களில் தரம் குறைவான டீ, காபி, தூள், பால், ரேஷன் அரிசியில் தயாரிக்கப்படும் இட்லி, தோசைகள் விற்கப்படுகின்றன. இலைகள், கழிவுநீர், மீதமான உணவுப்பொருட்கள், நெடுஞ்சாலையில் கொட்டப்படுகின்றன. இது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us