ADDED : ஆக 19, 2011 03:36 AM
பீர்க்கண்காரணை:வழி தவறி வந்த, மூன்று மாற்றுத் திறனாளி சிறுவர்களை போலீசார் மீட்டு, காதுகேளாதோர் பள்ளியில் ஒப்படைத்தனர்.போரூரில் இருந்து கடந்த 15ம் தேதி, செங்கல்பட்டிற்கு ஒரு லாரி சென்றது.
புது பெருங்களத்தூர் அருகே வந்தபோது, டிரைவர் லாரியை நிறுத்தி உள்ளே இருந்த மூன்று சிறுவர்களை கீழே இறக்கினார். பின்,''போரூரில், 'லிப்ட்' கேட்டதால் இந்த சிறுவர்களை ஏற்றினேன். ஆனால்,இவர்கள் எங்கு போகிறார்கள் என்பது தெரியவில்லை'' என்று கூறி, பீர்க்கண்காரணை போலீசாரிடம் சிறுவர்களை ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், மூன்று சிறுவர்களும் வாய்பேச முடியாத, காது கேட்காதவர்கள் என்பது தெரியவந்தது.பார்ப்பதற்கு வடமாநில சிறுவர்கள் போல் இருந்தனர். அவர்களின் பெயர் ராகுல், 10, குட்டி, 12, சசி, 11, என்பது மட்டும் தெரிந்தது. இதையடுத்து, மூன்று சிறுவர்களும் முடிச்சூரில் உள்ள காதுகேளாதோர் அரசு பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.


