/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்குற்றாலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
குற்றாலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
குற்றாலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
குற்றாலம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
UPDATED : செப் 29, 2011 02:33 AM
ADDED : செப் 29, 2011 01:57 AM
குற்றாலம் : குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ்துறை உயராய்வு மையம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 'நெல்லை மாவட்ட இலக்கியங்களில் பெண்ணிய சிந்தனைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு பராசக்தி கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்துறை தலைவர் பேராசிரியை வேலம்மாள் வரவேற்றார். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியை மகேஸ்வரி அறிமுக உரையாற்றினார். குப்பம் திராவிட பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் விவேகானந்தகோபால் மற்றும் எழுத்தாளர் பொன்னீலன் சிறப்புரையாற்றினர். உதவி பேராசிரியை ஈஸ்வரி நன்றி கூறினார். மாலை நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். உதவி பேராசிரியை துர்காதேவி அறிமுகவுரையாற்றினார். நெல்லை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இணை பேராசிரியை ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்துறை பேராசிரியை மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.


