ADDED : ஆக 06, 2011 10:53 PM
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் பேரங்காடியை பயன்பாடுக்கு
கொண்டு வரும் வழிமுறைகள் குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
நடத்தினார்.இங்கு மூன்று கோடி செலவில் நவீன வசதிகளுடன் பேரங்காடி
கட்டப்பட்டது.
கடந்த ஆட்சியில் திறப்பு விழாவும் நடத்தப்பட்டு, டெண்டர்
விடப்பட்டது. ஆனால் இன்று வரை செயல்படவில்லை.நேற்று, அமைச்சர்கள்
செங்கோட்டையன், விசுவநாதன், பேரங்காடியை ஆய்வு செய்து, அதிகாரிகள்,
விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினர்.கலெக்டர் நாகராஜன், அ.தி.மு.க., தொகுதி
செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் நல்லசாமி, நகர செயலாளர் ஜெயபால்,
துணை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் உதயம் ராமசாமி,
ஊராட்சி தலைவர் பூபதி, பேரவை ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றிய அவை தலைவர்
ராமலிங்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


