/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓ.இ., மில்கள் இயக்கம் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலை இழப்புஓ.இ., மில்கள் இயக்கம் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு
ஓ.இ., மில்கள் இயக்கம் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு
ஓ.இ., மில்கள் இயக்கம் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு
ஓ.இ., மில்கள் இயக்கம் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலை இழப்பு
ADDED : செப் 07, 2011 12:45 AM
திருப்பூர் : இரண்டு நாட்களாக நடந்து வரும் ஓ.இ., மில்களின் வேலை நிறுத்த
போராட்டத்தால், நான்கு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள் ளது.
மில்களின் இயக்கத்தை நம்பியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
வேலை இழந்து தவிக்கின்றனர்.திருப்பூர், பல்லடம், சோமனூர் பகுதி ஸ்பின்னிங்
மில்களில் இருந்து கழிவு பஞ்சு வாங்கி, மெத்தை, தலையணை உறைகள்
தயாரிப்புக்கு தேவையான 20ம் நம்பர் நூல் தயாரிக்கும் 50 ஓ. இ., மில்கள்
வெள்ளகோவிலில் இயங்கி வருகின்றன. கும்பகோணம், தேனி, மதுரை, தஞ்சாவூர்
உள்ளிட்ட தென்மாவட்டங்கள், பீகார், ஒரிசா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓ.இ., மில்களில்
பணிபுரிகின்றனர்.தனியாக வீடு எடுத்தும், மில்களில் தங்கியும் வேலை
பார்க்கும் தொழிலாளர்களுக்கு 'ஷிப்ட்' ஒன்றுக்கு ரூ.160 சம்பளம்
வழங்கப்படுகிறது. ஸ்பின்னிங் மில்களின் கழிவு பஞ்சு விலை
ஏற்றப்பட்டதையடுத்து, ஓ.இ., மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலுக்கான
விலை ஏற்றப்படவில்லை.கொள்முதல் செய்யப்படும் கழிவு பஞ்சுக்கு மார்க்கெட்
கமிட்டி விதிக்கும் ஒரு சதவீத செஸ் வரி; போக்குவரத்து செலவு, தொழிலாளர்
சம்பளங்களை கணக்கிடும்போது, ஓ.இ., மில்கள் நஷ்டத்தி லேயே இயங்கி வந்தன.
இந்நிலையில், திருப்பூர், பல்லடம், சோமனூர் பகுதி விசைத்தறியாளர்களின் வேலை
நிறுத்தத்தால், உற்பத்தி நூலை விற்க முடியாமல் மில்களில் தேக்கம்
அடைந்துள் ளது, ஓ.இ., மில்களுக்கு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியது.
கழிவு பஞ்சு விலை உயர்ந்துள்ள நிலையில், 20ம் நம்பர் நூல் விலையையும்
உயர்த்த வேண்டும்; தேவையற்ற வரி விதிப்பை நிறுத்தி விட்டு, உள்நாட்டு
தேவைக்கு போக மீதமாகும் நூலை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓ.இ., மில்கள் நேற்று
முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கின. இரண்டாவது நாளாக
நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது; இதனால், நூல்கள் தேக்கம்
அடைந்து ரூ.4 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மில்களும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஓ.இ., மில்களை நம்பி பணிபுரியும் 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து
தவிக்கின்றனர்.வெள்ளகோவில் ஓ.இ., மில் அசோசியேஷன் செயலாளர் செந்தில் குமார்
கூறியதாவது:விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்தத்தால், ஏற்கனவே உற்பத்தி
செய்த நூல்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து, வர்த்தக இழப்பு
ஏற்படுத்தியது. இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
நடத்துகிறோம். இரண்டு நாட்களாக நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால்,
ஓ.இ., மில்களை நம்பி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வரு வாய்
பாதிக்கப்பட்டுள்ளது; ரூ.4 கோடி நூல் வர்த்தகம் முடங்கிஉள்ளது.ஓ.இ.,
மில்களில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு சாப்பாடு, குடும்ப செலவுக்கான
தொகையை வழங்கி வருகிறோம். தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும்
ஊர்களுக்கு சென்று விட்டதால், ஸ்டிரைக் முடிந்ததும் ஆள் பற்றாக் குறை
ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூர், பல்லடம், சோமனூர் பகுதி
விசைத்தறியாளர்களின் முடிவை பொறுத்தே, ஓ.இ., மில்கள் மீண்டும் இயங்கும்,
என்றார்.


