ADDED : ஜூலை 13, 2011 10:02 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பஞ்சாயத்து தில்லைநாயகபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன்.
இவரது மகன் சந்தோஷ் (3). அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகள் அட்சயா(2). பால்வாடியில் படித்து வந்த சந்தோஷ், அட்சயா இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊரணி கரையில் விளையாடிய போது, தவறி தண்ணீருக்குள் விழுந்தனர். யாரும் பார்க்காததால் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் மூச்சு திணறி இறந்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


