எதிர்க்கட்சியினரின் யோசனை பிரதமர் மன்மோகன் நிராகரிப்பு
எதிர்க்கட்சியினரின் யோசனை பிரதமர் மன்மோகன் நிராகரிப்பு
எதிர்க்கட்சியினரின் யோசனை பிரதமர் மன்மோகன் நிராகரிப்பு
ADDED : ஜூலை 31, 2011 10:57 PM

புதுடில்லி:'லோக்பால் மசோதா வரம்பிற்குள், பிரதமர் பதவி வகிப்போரையும்
கொண்டு வர வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் யோசனை, ஏற்கத்தக்கதல்ல' என,
பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.பிரதமர் மன்மோகன் சிங் அளித்த
பேட்டி:லோக்பால் சட்ட மசோதா வரம்பிற்குள், பிரதமர் பதவி வகிப்போரையும்
கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
எதிர்க்கட்சியினரின் இந்த யோசனை, ஏற்கத்தக்கது அல்ல. இந்த விவகாரத்தில்,
அனைத்து பிரச்னைகளையும், கவனத்தில் கொண்டு தான், நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிரதமர் கூறினார்.லோக்பால் மசோதா தொடர்பாக
ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங், 'லோக்பால் சட்ட மசோதா வரம்பிற்குள்
பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என்பது தான், என் விருப்பம். ஆனால், மத்திய
அமைச்சரவை, வேறுவிதமாக முடிவு செய்து விட்டது'என்றார்.
பிரதமரின் இந்த
கருத்து, மத்திய அரசுக்குள்ளேயே, கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது.இதுகுறித்து சமீபத்தில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி கூறுகையில்,'லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வந்தால்,
மத்திய அரசின் செயல்பாடுகளில் நிரந்தரமான நிலையற்ற தன்மை ஏற்பட்டு விடும்'
என்றார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில், பிரதமரும், தற்போது தன்
கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.


