ADDED : ஜூலை 26, 2011 12:46 AM
மதுரை : மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், மின்சாதன விற்பனை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு தரமற்ற மின்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐ.எஸ்.ஐ., முத்திரை பொறிக்கப்படாத வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், ரேடியேட்டர்ஸ், ஸ்டவ், சுவிட்ச், டங்க்ஸ்டன் விளக்கு, சிஎப்எல்., விளக்கு, சர்க்யூட் பிரேக்கர்ஸ், பியூஸ் கேரியர், சுவிட்ச் கியர், கண்ட்ரோல் கியர், பிவிசி இன்சுலேடட் கேபிள், வாட் ஹவர் மீட்டர் மற்றும் இதர வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
இதுகுறித்து தொழில்மைய பொதுமேலாளர் மருதப்பன் கூறுகையில்,'' ஒத்தகடை, மேலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்படாத மின்சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனையாளர் மீது வழக்கு தொடரப்படும்,'' என்றார்.