ADDED : ஆக 30, 2011 11:30 PM
புதுச்சேரி : மத்திய அரசு ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் அம்பேத்கார் மக்கள் படை இணைந்து இலவச தாய் சேய் நல ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தியது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கம்பிளிக்காரன் குப்பம் கிராமத்தில் நடந்த இந்த மருத்துவ முகாமினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் புவ னேஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் அம்பேத்கர் மக்கள் படையின் மாநில தலைவர் பாவடைராயன், முன்னாள் வார்டு உறுப்பினர் பத்மவாதி, சுந்தரமூர்த்தி, செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.


