ADDED : செப் 30, 2011 02:02 AM
மதுரை : மதுரை யூனியன் அலுவலகம் பகுதியில் நேற்று தொடர் மின்தடை ஏற்பட்டதால், வேட்பாளர்கள் இருட்டறைகளில் மனுத்தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு நாளான நேற்று மதுரை மேற்கு, கிழக்கு யூனியன் அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் பேர் கூடினர். அலுவலகம் செயல்பட துவங்கியது முதல் பகல் 12 மணி வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அறைகளில் வெளிச்சமே இல்லை. வேட்பாளர்கள், சாட்சி கையொப்பம் இடுவோர், மாற்று வேட்பாளர்கள் என நிரம்பி வழிந்த இந்த அறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த சிலர் அறைக்குள் மூச்சு திணறுகிறது, என வெளியேறினர். மதுரையில் இரண்டு மணிநேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. ஆனால் பல இடங்களில் அறிவிக்கப்பாடமல் நான்கு மணிநேரம் வரையிலும் மின்தடை ஏற்படுகிறது, என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.