/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:வரும் 10 வரை விண்ணப்பிக்கலாம்சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:வரும் 10 வரை விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:வரும் 10 வரை விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:வரும் 10 வரை விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:வரும் 10 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 03, 2011 01:34 AM
கோவை : பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவி கோரும் விண்ணப்பப்படிவங்களை விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு வரும் 10ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த, சீக்கிய, பார்சி ஆகிய மதங்களை சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பப்படிவங்களை, கல்வி நிலையங்களின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு, வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வேண்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 10ம் தேதிக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை தீதீதீ.ட்டிணணிணூடிtதூச்ஞூஞூச்டிணூண்.ஞ்ணிதி.டிண என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கல்வி நிலையங்கள், மாணவ, மாணவியரிடமிருந்து பெறும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய படிவத்தில் புதுப்பித்தல் மற்றும் புதியதற்கான கேட்புப்பட்டியலை வரும் 15ம் தேதிக்குள் குறுந்தகட்டில் பதிந்து சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் பயிலும் சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளி படிப்பு/ பள்ளி மேற்படிப்புக்கான உதவி தொகையினை பெற தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் மூலம் மேற்குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.


