Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., - காங்., வேட்பு மனு

கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., - காங்., வேட்பு மனு

கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., - காங்., வேட்பு மனு

கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு தி.மு.க., - காங்., வேட்பு மனு

ADDED : செப் 30, 2011 01:49 AM


Google News
கடலூர் : கடலூர் நகராட்சி சேர்மன் பதவிக்கு கடைசி நாளான நேற்று தி.மு.க.,-காங்.,-வி.சி.,-பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த 22ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது.

மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று கடலூர் நகராட்சியில் சேர்மன் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்ய ஏராளமானோர் கூடியதால் கடலூர் பாரதி ரோட்டில் கூட்டம் அலைமோதியது. கடைசி நாளான நேற்று முக்கிய கட்சிகள் சார்பில் சேர்மன் பதவிக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க.,: நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜா மனு தாக்கல் செய்தார். இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, நகர செயலர் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், அவைத் தலைவர் நாராயணன், முன்னாள் நகர செயலர் பத்மநாபன், வக்கீல் வனராசு உள்ளிட்டோர் இருந்தனர். பா.ஜ.க.,: மாவட்ட செயலர் துறை முகம் செல்வம் மனு தாக்கல் செய்தார். இவருடன் நகர தலைவர் வெங்கடேசன், அகஸ்தியபாரதி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். வி.சி.,: தற்போதைய நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன் மனு தாக்கல் செய்தார். இவருடன் மாவட்ட செயலர் திருமாறன், நெல்லிக்குப்பம் சேர்மன் கெய்க்வாட் பாபு, மாவட்ட துணை செயலர் அறிவுடைநம்பி, வக்கீல் திருமார்பன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். பொதுநல அமைப்பு: கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த அனைத்து பொது நல அமைப்புகள் சார்பில் பால்ராஜ் மனு தாக்கல் செய்தார். இவருடன் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், நுகர்வோர் மற்றும் சமூக சட்ட விழிப்புணர்வு சேவை மையத்தின் தலைவர் சையது மொய்தின், நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு பேரவையின் தலைவர் லட்சுமிநாராயணன், நுகர்வோர், பாதுகாப்பு மையத்தின் செயலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காங்.,: காங்.,கட்சியின் சார்பில் முன்னாள் இளைஞர் காங்., தலைவர் வக்கீல் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். இவருடன் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், மாநில துணை தலைவர் வெங்கடேசன், நகர தலைவர் ரகுபதி, இளைஞர் காங்., தொகுதி செயலர் ராமராஜ், ஞானசந்தர், மாவட்ட செயலர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பா.ம.க.,: பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சண்முகத்திற்கு பதில் பிற்பகல் 2.30 மணிக்கு வக்கீல் தமிழரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மனுதாக்கலுக்கு தேவையான ஆவணங்களை மாலை 3 மணிக்குள் தயார் செய்ய முடியாததால் அவர் மனுதாக்கல் செய்யவில்லை. கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us