/உள்ளூர் செய்திகள்/சென்னை/வயலில் மறைத்து வைத்த ஆறு கற்சிலைகள் மீட்புவயலில் மறைத்து வைத்த ஆறு கற்சிலைகள் மீட்பு
வயலில் மறைத்து வைத்த ஆறு கற்சிலைகள் மீட்பு
வயலில் மறைத்து வைத்த ஆறு கற்சிலைகள் மீட்பு
வயலில் மறைத்து வைத்த ஆறு கற்சிலைகள் மீட்பு
ADDED : அக் 07, 2011 12:55 AM
சென்னை : கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம், வயல்வெ ளியில் தென்னங்கீற்றால் மறைத்து வைக்கப்பட்ட, ஆறு சாமி கற்சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த கல்பாக்கம் பூந்தண்டலத்தில், விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த வயல்வெளி நடைபாதையில், தென்னங்கீற்று குவியல் கிடந்ததை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அதை பிரித்து பார்த்தனர். அதில், முருகன், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி உட்பட, ஆறு கருங்கல் சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சதுரங்கப்பட்டினம் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.


