ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : என்.ஆர்.
காங்., வேட்பாளரை ஆதரித்து வீடு வீடாக சென்று முதல்வர் ஓட்டு சேகரித்தார். என்.ஆர். காங்., கட்சியினர் ஓட்டு சேகரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தர்மாபுரி பகுதியில் வேட்பாளர் தமிழ்ச்செல்வன் நேற்று காலை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் சிவா, கார்த்திகேயன், உழவர்கரை முன்னாள் சேர்மன் ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகச் சென்று, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மறுபக்கம் முத்திரையர்பாளையம், வழுதாவூர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி வீடு வீடாகச் சென்று, வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஓட்டு கேட்டார். அமைச்சர்கள் கல்யாணசுந்தரம், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அசோக் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர். பின், அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் சென்று கோவிந்தன்பேட்டை பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.


