ஓவராக குடித்தவர் நாக்கு வறண்டு பலி
ஓவராக குடித்தவர் நாக்கு வறண்டு பலி
ஓவராக குடித்தவர் நாக்கு வறண்டு பலி
ADDED : ஜூலை 17, 2011 01:41 AM
கடலூர் : அளவுக்கு அதிகமாக குடித்தவர் நாக்கு வறண்டு இறந்தார்.நெய்வேலி அடுத்த ஊமங்கலம், எலுமிச்சை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 40.
இவர் கடந்த 14ம் தேதி காலை 10 மணிக்கு தனது மனைவி லதாவிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் அன்று இரவு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை காட்டுகூனங்குறிச்சி சுடுகாடு அருகே இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்ததால் நாக்கு வறண்டு இறந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில், நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.