தகவலே இல்லாமல் இயங்கும் தலைமை தபால் துறை அலுவலகம்
தகவலே இல்லாமல் இயங்கும் தலைமை தபால் துறை அலுவலகம்
தகவலே இல்லாமல் இயங்கும் தலைமை தபால் துறை அலுவலகம்
சென்னை : நாடு முழுவதும், பல ஆண்டுகளாக செயல்பட்ட,'சான்று ஒப்புகை அத்தாட்சி' திட்டத்தை, எவ்வித அறிவிப்பின்றி நிறுத்திய, தபால் துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உலகில் மிகப்பெரிய தபால் நிலையக் கட்டமைப்பை கொண்டிருக்கும் இந்திய தபால் துறை, 'தபால் விநியோகம், தபால் அட்டை, அஞ்சல் தலை, மணி ஆர்டர், இன்லேண்ட் லெட்டர்' விற்பனை உள்ளிட்ட பாரம்பரிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில்,'சான்று ஒப்புகை அத்தாட்சி' (க்ணஞீஞுணூ இஞுணூtடிஞூடிஞிச்tஞு ணிஞூ கணிண்tடிணஞ்) என்ற திட்டம், இந்திய தபால் துறை துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே நடைமுறைக்கு வந்தது. கடந்த 150 ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நவீன மயமாக்கல் மற்றும் லாப நோக்கு என்ற பெயரில், தபால் துறை மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பரவலான எதிர்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப் பின்றி, 'சான்று ஒப்புகை அத்தாட்சி' என்ற திட்டத்திற்கு மூடு விழா நடத்திய, தபால் துறையின் நடவடிக்கைக்கு, தபால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகத்தில் கேட்டபோது, இதற்கான தகவல்கள் இல்லை எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது: என் அலுவல் சார்ந்த அனைத்து கடிதங்களையும்,'சான்று ஒப்புகை அத்தாட்சி' மூலம் அனுப்புவது வழக்கம். சமீபத்தில், கடிதங்களை அனுப்ப தபால் நிலையம் சென்றேன். அப்போது, இனி இந்த முறையில் கடிதங்களை அனுப்ப முடியாது. இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று தபால் ஊழியர்கள் கூறினர். 'எப்போது, எதற்காக' சான்று ஒப்புகை அத்தாட்சி திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து ஊழியர்களுக்கே தகவல் தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம், தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகத்தில், இத்திட்டம் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டேன். அதற்கு கிடைத்த பதில்கள் அதிர்ச்சியாக உள்ளன. திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு, எதற்காக கைவிடப்பட்டது, இத்திட்டத்தால், கடந்த 10 ஆண்டுகளில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இல்லை என தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகம் பதிலளித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இது தபால் துறையின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. சேவை புரியும் எந்த ஒரு அரசு நிறுவனமும், மக்களுக்காக ஒரு திட்டத்தை துவக்கும் முன் அல்லது திட்டத்தை நிறுத்தும் முன், அதற்கான அறிவிப்பை செய்தித்தாள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்தை நிறுத்தியதை தெரியப்படுத்தாமல், அரசிதழில் வெளியான ஆணை எண்ணை கையால் எழுதி தெரிவித்தது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒரு காலத்தில், சிறப்பான நிர்வாகத்தால் அனைவரின் பாராட்டையும் பெற்ற தபால் துறையின், தமிழக வட்ட தலைமை தபால் துறை அலுவலகத்தில் ஒருதிட்டம் குறித்த அடிப்படை தகவலே இல்லாதது வேதனையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.


