ADDED : செப் 07, 2011 11:17 PM
குஜிலியம்பாறை : நான்குவழிச்சாலையில் கட்டுப்பாடற்ற வேகம், விதி மீறலால் விபத்து, தொடர்கதையாக உள் ளது.இரு வழி சாலைகள், நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்ட பின், விபத்து குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக, இரு வழி சாலையாக இருந்த போது நடந்த விபத்துகளுக்கு ஈடாக, தற்போதும் நடக்கின்றன. கனரக வாகனங்கள், கார்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்களை ஓட்டுனரால் சமாளிக்க முடியாமல் விபத்து நடக்கிறது.மேலும் விதிமுறை மீறி செல்வது, ரோட்டை கடப்பது போன்றவற்றாலும் விபத்து தொடர் கதையாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். விபத்துக்களை குறைக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு போலீசார், தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.


