நர்ஸ்கள் நியமனம்: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
நர்ஸ்கள் நியமனம்: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
நர்ஸ்கள் நியமனம்: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 24, 2011 10:06 PM

மதுரை : அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தவர்களுக்கும், அரசு மருத்துவமனை நர்ஸ்கள் நியமனத்தில் வாய்ப்புகள் வழங்கக் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.
அதை விசாரித்த ஐகோர்ட் கிளை டிவிஷன் பெஞ்ச், தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்களும் நியமிக்கப்படுவர் என, அரசு அறிவித்தது. டிவிஷன் பெஞ்ச் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி, அரசு நர்சிங் கல்லூரியில் பயின்ற கலைச்செல்வி உட்பட 5 பேர், மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், அரசு மருத்துவமனை நர்ஸ்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர, உத்தரவிட்டது. மேலும், மனு குறித்து பதிலளிக்க சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்டது. தனியார் நர்சிங் கல்லூரி மாணவர் சங்க நிர்வாகி செந்தில்நாதன் கூறுகையில், ''தமிழகத்தில் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து முடித்து, 50 ஆயிரம் பேர் வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்,'' என்றார்.


