உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ADDED : அக் 07, 2011 06:50 AM
புதுடில்லி: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.உ.பி., மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட நிலையில் தற்போது 2-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலை கட்சியின் பொது செயலாளர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் வெளியிட்டார். இந்த பட்டியில் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 73 பெயர்கள்அடங்கிய முதல்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியி்டப்பட்டுள்ள 2-வது பட்டியலில் 62 பேர்களது பெயர்கள் உள்ளது. மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 403 ஆகும்.


